சுணைக்குது -----ந.சத்தியபாலன்.
ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புதிய வரவு புலம்பெயர் படைப்பாளி நிரூபாவின் 'சுணைக்குது' சிறுகதை நூல்.
அண்மைக் காலத்தில் பரவலாக நிகழ்ந்து வரும் படைப்பு முயற்சிகள் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முனைப்பையும், துடிப்பையும் வெளிக்காட்டுவனவாக உள்ளன.
இந்த வகையில் 20 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்ற நிரூபா – அங்கிருந்து படைத்துள்ள பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட படைப்பாளி, தேசம் கடந்து போனாலும் இந்த மலர் மீதும், இந்த வாழ்ந்த வாழ்க்கை மீதும் கொண்ட நேசத்தின் வெளிப்பாடாகவே இந்த நூலைத் தந்துள்ளார்.
இந்த நூலின் பேசுபொருள் மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பது கவனிக்க வேண்டிய விடயம். கட்டிளமைப் பருவத்துச் சிறுவர்களே இந்தக் கதைகளின் பாத்திரங்களாக உள்ளார்கள். அவர்களின் தன்மை இடத்து எடுத்துக் கூறல் உத்தியிலேயே கதைகள் தரப்பட்டுள்ளன.
பெரியவர்கள் எப்போதும் சிறுவர்களை அவர்களின் மன எண்ணிக்கைகள், சிந்தனைப் போக்குகள், பார்வைகள் என்பவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களின் வளர்ச்சிப் பருவத்தில் நிகழத்தக்க தாக்கங்கள் தரித்து விழிப்புடனோ, அக்கறையுடனோ தொழிற்படுவதில்லை. பாதிப்புகள் பாரதூரமாகி விளைவுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகுதான் பதறிப் பதைத்துத் தொழிற்படுகிறோம்.
உண்மையிலேயே எமது வாழ்க்கைச் சூழல் எமது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குகிறதா என்பது பற்றி நாம் பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை. இது எமது புலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை அவதானிக்கக் கூடிய ஒரு குறைபாடு. நிரூபாவின் சிறுகதைகள் பிள்ளைகளின் உலகைப் பற்றிப் பேசுகின்றன. வஞ்சகமில்லாத கொள்ளையுள்ளம் கொண்ட அந்தக் குழந்தைகள் எவ்வித அச்சமுமின்றிச் சுதந்திரமாய் இயங்க முனையும் போது அவர்களின் சூழலே அவர்களுக்கு எதிரான விளைவுகளைத் தோற்றுவிப்பதாக-அவர்களை உடல் உளப்பாதிப்புக்கு உட்படுத்துவதாக அமைவது எவ்வளவு துன்பகரமானது என்ற உண்மை நிரூபாவின் கதைகளூடு புலப்படுகிறது.
சிறுவர் துஷ்பிரயோகம்-பாலியல் வன்முறைகள் இவற்றினூடாக எமது பிஞ்சுகள் அடையும் துயரம் கதைகளைப் படித்து முடிக்கையில் ஒரு வேதனையாய் மனதில் தங்கிப் போகிறது.
குறிப்பாகப் பெண் குழந்தைகள் அடையும் மனவேதனை மற்றும் அவர்களுக்கு மனதில் ஏற்படும் அச்சங்கள், பேதமைமிக்க அவர்களின் பயங்களுக்குள் அமுங்கிப்போகும் உண்மைகள் என்பன நிரூபாவின் கதைகளில் வெளிப்படுகிறது.
காலங்காலமாய் ஆண் -பெண் உறவுபற்றிய விடயங்களைப் பேசாப் பொருளாக அருவருப்பான ஒன்றாகச் சொல்லிவந்தமையின் விளைவாம் இந்தக் குழந்தைகள் தமக்கு ஏற்படும் தீர்வுகளை வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.
சில சமயங்களில் நம்பிக்கைக்குரிய என யாராலும் நம்பப்படுகிற ஒரு சூழல் கூட ஒரு பெண் குழந்தைக்குப் பாதகமாக அமைந்து விடுவதை நாமே நடைமுறையில் அறியமுடிகிறது. நிரூபாவின் சிறுகதையொன்று அத்தகைய ஒரு சிக்கலுக்கு உள்ளாகும் ஒரு பெண் குழந்தையின் துயர அநுபவத்தைச் சொல்கிறது.
மொத்தத்தில் இந்தக் கதைகள் சரியான ஒரு காலப் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. புலம்பெயர் மண்ணில் எழுதப்பட்ட போதும், எமது வாழ்வே எமது சூழலே சித்தரிக்கப்பட்டுள்ளது. வளமான ஒரு மொழியில் பிசிறில்லாத ஒரு பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் கோணங்களாகவோ, போதனையாகவோ அமையாமல் உள்ளமை ஒரு பாராட்டுக்குரிய அம்சம்.
சிறுவரின் உடல்-மனநலம் பற்றிய அக்கறையின்மை, குழந்தை உழைப்புச் சுரண்டல் பொறுப்பில்லாத மூத்தோரின் அக்கறையற்ற நடைமுறைகள் என்பன மறைமுகமாக விமர்சனத்துக்கு உள்ளாகின்ற விதமாய் அமைந்துள்ளன இந்தக் கதைகள்.
பாராட்டி வரவேற்கவேண்டிய ஒரு முயற்சி-புத்தகத்தின் வடிவமைப்பு, அச்சகம் போன்றவையும் பாராட்டுக்குரியன. மிகக் கவனமாக வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ள நிரூபாவின் இந்த நூல் சிறுகதையுலகுக்கு ஒரு நல்ல வரவு எனலாம்.
-0-
----ந.சத்தியபாலன்.
26.09.2005 – ஈழநாடு (இலங்கை)